அரசு பணிக்கு போட்டி தேர்வுகள்: வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி அறிவிப்பு. அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்கே.அருள்மொழி தெரிவித்தார். அரசு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2-ஏ எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் 116 இடங்களில் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். சென்னையில் மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சாந்தோம் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி உள்பட 209 மையங்களில் 91 ஆயிரத்து 939 பேர் தேர்வெழுதினர். என்கேடி பள்ளி தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, சென்னை மாவட்ட புதிய ஆட்சியர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பி...
Posts
Showing posts from January 25, 2016