Posts

Showing posts from January 14, 2016
1.5 லட்சம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவு. போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை  சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன்,37, வேலுார் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம  அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக  சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி,  திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும்  போலீசார்  கைது செய்தனர். இதேபோல், வேலுார்மாவட்டம்,  கந்திலி ஒன்றியம் செவ்வாத்துார் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற  பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.  பின், இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.  இவர்களை தொடர்ந்து, கிருஷ்ணக...
ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி          மதுரை:மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரத்து  காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.           பணியிடங்கள் விபரம் :ரயில்வேயில் கமர்ஷியல் அப்ரண்டிஸ்- 703, டிராபிக் அப்ரண்டிஸ்- 1645, என்கொயரி மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்- 127, கூட்ஸ் கார்டு- 7561, ஜுனியர் அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 1205, சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 869, உதவி ஸ்டேஷன் மாஸ்டர்- 5942, டிராபிக் அசிஸ்டன்ட்- 166, சீனியர் டைம்கீப்பர்4. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை ரயில்வேயில்-986, திருவனந்தபுரத்தில்- 488 பணியிடங்கள் அடங்கும். தேர்வில் 100 வினாக்கள் அப...
10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விபரம் சேகரிக்கும் பணி!                     பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.          தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ,  கனமழை காரணமாக , அரையாண்டு தேர்வு ஒத்தி வைத்தது ,  பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. ரிவிஷன் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில் , 100  சதவிகித தேர்ச்சி விகிதத்தை ,  ஒவ்வொரு ஆசிரியரும் வழங்க வேண்டும் என ,  கல்வித்துறையால் நெருக்கடி தரப்படுகிறது. காலாண்டு ,  முன்மாதிரி தேர்வு என ,  ஒவ்வொரு தேர்விலும் ,  தேர்ச்சி விகிதம் குறைந்த பாட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு ,  எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் , 100  சதவிகித தேர்ச்சி பெற வைக்க ,  ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ...
1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவு. கிருஷ்ணகிரியில் 1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). இவர் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிளஸ் 2 வரை படித்த, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்மூலம் முனியப்பன் அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். இதுபோல போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இதையடுத்துதருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திரன், முனியப்பனையும், கிருஷ்ணகிரி போலீஸார் செந்தில்குமாரையும் கைது செய்தனர். போலி ஆசிரியர் விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்குத் தொடர் விடுமுறை எடுத்த ஆசிரியர்கள் கு...