TNTET-2013: வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்துஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களு...
Posts
Showing posts from January 8, 2016
- Get link
- X
- Other Apps
TRB அறிவிப்பு வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/ trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து பரிசீலனை தேர்தல் பணிகள் உள்ளிட்ட கல்வி சாராத பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார். இதுகுறித்து அவர், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: தேர்தல் பணிகளிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளிலும் பள்ளிக்கூட ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகிறோம். பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தும் பணிகளும் அவகளிடம் அளிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என மத்திய அரசும் விரும்புகிறது. அவர்கள் கல்வி போதிப்பதில் கவனம் செலுத்தினால் போதும். இதுதொடர்பாக, விரைவில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றார் ராம் சங்கர் கட்டேரியா. தேர்தல் பணிகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றில் பள்ளிக்கூட ஆசிரியர்களை ஈடுபடுத்துவது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள்...