Posts

Showing posts from January 6, 2016
10ம் வகுப்பு தேர்வு தேதி மாறுகிறதா? : தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம் தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் சமயத்தில் தேர்தல் தேதியும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு தேதி மாற்றம் குறித்து மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் முடிவு செய்வார் என இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்தார். அப்போது அவர், பொங்கல் முடிந்த பின் மத்திய தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது. தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 43,000 பேர் வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். 18,000 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும். அரசியல் கட்சிகள் ...
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை,எங்கெங்கு கிடைக்கும்?          சென்னையில்  அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.   காஞ்சிபுரம் - குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,    திருவள்ளூர் - ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,    கடலூர் -மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,   விழுப்புரம் - பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,    தஞ்சை - மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,    நாகப்பட்டினம் - சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,    திருவாரூர் - அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,    மதுரை - வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,    தேனி...