ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கையால் அச்சப்பட தேவையில்லை-அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
செல்லத்தகுந்த இடங்கள் :
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவ., 11-ம் தேதி வரை செல்லுபடியாகும். அதேசமயம் காசோலை, டி.டி., கிரடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
அடையாள அட்டை அவசியம்:
தற்போதைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
உச்சவரம்பு :
18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வங்கியில் எடுக்கலாம். 19ம் தேதியிலிருந்து வங்கி பரிவர்த்தனையின் உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயம் தேவையில்லை :
மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நேர்மையான வழியில் பணம் சம்பாதித்த மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. அடுத்த இரண்டு நாட்கள் நாட்டு மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டாலும், புதிய உலகிற்கு இந்தியா வல்லரசாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம். சில நாட்களில் எல்லா சிரமங்களும் தீர்ந்து, வழக்கமான பணிகளை எல்லோருமே மேற்கொள்ளலாம். இருக்கும் பணத்தையும் மாற்றிக்கொள்வதில் பிரச்னை இருக்காது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அரசு அனுமதிக்கிறது.கருப்பு பண ஒழிப்பு முயற்சிக்கு சில சிரமங்களை ஏற்க மக்களாகிய நாம் தயாராக இருப்போம்.
Comments
Post a Comment