TNTET : 2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை.

2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற
 வேண்டும் என நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு

 நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு
 உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில்
 பணிபுரியும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்

 தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம்
 பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி 
பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 

அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு
 தொடர்பான வழக்குநிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த
 முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, 
அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் 
பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்பணியாற்றி 2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட 
இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக்
 காலம் அரசுஉத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம்

 பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் 
முழுவதும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் 
தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான 
விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர்.இது குறித்து அரசு எதுவும் தெளிவான 
அறிவிப்பு வெளியிடாத நிலையில் சில மாவட்ட அதிகாரிகள்,
 தலைமை ஆசிரியர்கள் இம்மாதம் வழங்க வேண்டிய ஆண்டு
 ஊதிய உய்ர்வை தன்னிச்சை யாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது ஆசிரியர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்வே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில்
 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து 
விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும*்என கேட்டுக்கொள்கிறோம்.

*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்
*_பொதுச்செயலாளர_
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Comments

Popular posts from this blog