அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான,

குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், 
வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. 
இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, 
நவ., 6ல் நடக்கிறது.

10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு, 
15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், 
ஹால் டிக்கெட் வெளியாகும். தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், 
ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, 
தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில்,
 ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால்,
 விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி,
 நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட்
 வெளியிடப்படும்,'' என்றார். 

Comments

Popular posts from this blog