தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி...
Comments
Post a Comment