நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

நூலகர்-உதவி நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



பல்வேறு பணிகளில் நூலகர்-உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலிப்
பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.


இந்தப் பதவிகளுக்கான நேர்காணலுக்கு 64 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் வரும் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 4, 5 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.


விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கான அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு -நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog