ஜன., 22ல் 'நெட்' தேர்வு
உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பான, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடித்தோர், கல்லுாரி, பல்கலைகளில் உதவிப் பேராசிரியராக, மத்திய அரசின் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
முதுநிலை படிப்பை முடித்தோர், ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, மத்திய அரசின் நிதி உதவி பெறவும், இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு ஜூலையில் முடிந்து விட்ட நிலையில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடத்தப்பட உள்ளது. 'இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Comments
Post a Comment