DSE ஆசிரியர் கவுன்சிலிங் இன்று துவக்கம்
அரசு உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. குளறுபடியை தடுக்க, இணை இயக்குனர்கள் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கவுன்சிலிங் துவங்குகிறது.
முதல் நாளில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. காலியிடங்களை மறைக்காமல், நேரடியாக, வெளிப்படையாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மாவட்டந்தோறும் மண்டல வாரியாக, இணை இயக்குனர்களுக்கு, கவுன்சிலிங் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் நடக்கும் இடங்களில், அதிரடி ஆய்வு மேற்கொள்ளவும், காலியிடங்களை மறைக்கும் கணினி அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment