சுந்தரனார் பல்கலை.யில் தாற்காலிக பணி: ஆகஸ்ட் 10 இல் நேர்முகத்தேர்வு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 10- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் புள்ளியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு பாடங்களைக் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் விதிகளின்படி கல்வித்தகுதி உள்ளவர்கள் தாற்காலிக உதவி பேராசிரியர் பணியில் சேரலாம்.
இதற்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை (ஆக.10) அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக புள்ளியில் துறையில் வைத்து நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (2 புகைப்படம், 2 சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள்) பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் அடிப்படைத் தகுதியாகவும், புள்ளியியல் மற்றும் புள்ளியியல் மென்பொருள் பயன்பாடு குறித்த சிறப்பு அறிவு விரும்பத்தக்கத் தகுதியாகவும் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment