தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
அரசு பள்ளிகளில் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களும், உயர் கல்வியில் வேறு பாடங்கள் படித்தாலும், அவர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இதேபோன்ற ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், திருவாரூரில் நடந்தது. இதுகுறித்து, மாநில அமைப்பாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது: உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல், 3,000க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு இல்லாத பணி இடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது;
இதில், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம், 5,400 ரூபாய் என, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment