B.Ed படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர் சேர்க்கை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,777 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் 1 முதல் வழங் கப்பட்டன. விண்ணப்பம் வழங்கு வதற்கான கடைசி நாள் செவ்வாய்க் கிழமையுடன் முடிவடைந்தது.
4 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருந்தன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.
விண்ணப்ப விற்பனை மற்றும் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு பி.எட் மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை எம்.தில்லை நாயகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-பிஎட் படிப்பில் சேர 4 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் வாங்கியிருந்தனர். கடைசி நாளான நேற்று நிலவரப்படி, ஏறத்தாழ 3,700 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (இன்று) காலை வருவதற்கும் வாய்ப்புள்ளது. விற்பனையான அனைத்து விண் ணப்பங்களும் கிட்டதட்ட வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். விண்ணப்ப பரிசீலனை முடிவடைந் ததும். தரவரிசைப்பட்டியல் வெளி யிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துவிட திட்டமிட்டுள்ளோம். கலந்தாய்வு நாள் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும்.இவ்வாறு தில்லை நாயகி கூறினார்.

Comments
Post a Comment