வேலையில்லா பட்டதாரிகள்,ஆசிரியர்கள் 18 லட்சம் பேர்

தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.

இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர்

. பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர். வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில், வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog