எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் நியமனம்: மு.க.ஸ்டாலின்
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- தமிழகம் முழுவதும் உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில் 8 லட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்துத்தேர்வில் பங்கேற்றவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 25 மதிப்பெண்ணுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இதனால் 150 மதிப்பெண்ணுக்கு எழுதப்பட்ட எழுத்துத் தேர்வுக்கு மதிப்பற்றுப் போகுமோ என்று தேர்வெழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இதுபோன்ற பணிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்வது முறைகேட்டுக்கு வழிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் எழுத்துத் தேர்வு நடைபெற்று ஓராண்டாக்கு மேலாகியும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, நீதிமன்ற உத்தரவினை ஏற்று, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Post a Comment