இதுவரை 79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல்
''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணியின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: கடந்த, 2011 முதல், அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும், 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், தொடக்கப் பள்ளிகளில், தேசிய சராசரியான, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம், 1:25 என, குறைந்துள்ளது. அதேபோல, இடைநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், தேசிய சராசரியை விட, நம் சராசரி சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Comments
Post a Comment