200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

தமிழகத்தில் 200 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாநிலத்தலைவர் மணிவாசகன் தலைமையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் தேவை என்ற அடிப்படையில் மேலும் 5ஆயிரம் முதுகலை ஆசிரியர்பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மொழியாசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு முறையில் உள்ள குறைகள்களையப்பட்டு முறையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். அகில இந்திய நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெறவும், கல்வித்திறனை மேம்படுத்திடவும், 80சதவீதத்திற்கு மேல்அறிதல், புரிந்துகொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாள்கள் அமையவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டலச்செயலர் செல்வம், மாவட்டச்செயலர் தாமரைச்செல்வம், அமைப்புச்செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog