செப்டம்பர் 2 வரை பேரவை கூட்டத் தொடர்:பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அளித்த பேட்டி: தமிழக சட்டப் பேரவை வரும் 25-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பின்னர், கூட்டம் தொடங்கும். திங்கள்கிழமை முதல் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறும்.

இந்த விவாதமும், விவாதத்துக்கான பதிலுரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) வரை நடைபெறும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு, நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.

மானியக் கோரிக்கைகள்: ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். இந்த விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பர். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மானியக் கோரிக்கைகள் நிறைவேறும்.

ஆகஸ்ட் 9: உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

Comments

Popular posts from this blog