தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு அளித்த நிதி உதவியும், அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என, மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை தமிழக பள்ளிக்கல்வி செயலரிடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான திட்டங்களையும், அதற்கான நிதியையும் அறிக்கையாக அளித்து, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி உதவி கேட்டுள்ளது. இதை பரிசீலித்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட பிரிவு, தமிழகத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகள் என்ன?
தமிழக அரசு அனுமதி கேட்ட திட்டங்களும், நிதியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால், மாநில அரசின் திட்ட பங்கீடு சரியாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், பெற்றோர், கல்வியாளர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு கண்டிப்பாக அமைத்து, அவர்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அந்த கணக்கில் பள்ளியின் வளர்ச்சி நிதி வழங்கப்படும். கடந்த கல்வி ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் நிறைவு சான்றிதழை அளித்த பிறகே, முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்படும். இரண்டாவது தவணை நிதியானது, மாநில அரசின் பங்கு தொகை ஒதுக்கிய பிறகே, மத்திய அரசிடமிருந்து வழங்கப்படும். இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

Comments
Post a Comment