இந்த ஆண்டு முதல் 200க்கு பதில் 100 தான் பி.எட் கல்லூரிகளில் செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு


இந்த ஆண்டு முதல் பி.எட் கல்லூரிகளில் செய்முறை தேர்வின் மதிப்பெண் 200க்கு பதில் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பி.எட் படிப்பு ஓராண்டாக இருந்தது. இந்த ஆண்டு முதல் இப்படிப்பு 2 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் பி.எட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் 690 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பி.எட் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலாம் ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் முறை குறித்து பி.எட் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தியரி என்ற கருத்தியல் தேர்வுகளுக்கு 900 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டில் செய்முறை மதிப்பெண்ணான 200 மதிப்பெண்ணில் 50 சதவீதம் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது 100 செய்முறை மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் செய்முறை பயிற்சிகள் எடுக்காமலேயே 50 சதவீத தேர்ச்சி மதிப்பெண்ணான 100 மதிப்பெண்களை பெற முடியும்.

இதுகுறித்து கல்வியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் கேட்டபோது, `200 மதிப்பெண்ணில் பாதி மதிப்பெண் குறைக்கப்பட்டதால் முதலாம் ஆண்டில் 40 நாட்கள் பள்ளிகளுக்கு சென்று பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பர். அப்போது கிடைக்கும் அனுபவங்களை வகுப்பில் பாடம் எடுத்தல், மாணவர்களின் நடத்தை பற்றி எழுதுதல், மாணவர்களின் உணர்வை புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை மாணவர்களிடம் இருந்து கண்டறிய முடியும். தற்போது வகுப்புகளில் பாடம் கற்பிக்க தேவையான கற்றல் உபகரணங்கள் என பல வகை செய்முறைகளை பி.எட் மாணவர்கள் கையாள வேண்டும்.

செய்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்டதால், மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வாய்ப்புகள் இல்லாமல் போகும். மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. உளவியல் திறன் என்பது முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட உள்ளது’ என்றனர்.

Comments

Popular posts from this blog