பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ல் துவங்கி, ஏப்ரல் 13-ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர்.
இதில் விருதுநகர் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சிவகுமார், நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். மாநில 2-வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்றுள்ளனர். 3-வது இடத்தை 224 பேர் 497 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Comments
Post a Comment