10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்கள் குழப்பம்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

10-ஆம் வகுப்புக்கான அரசுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள், கணிதம் ஆகியவை நடந்து முடிந்துள்ளன. கணிதத் தேர்வில் பிரிவு ஐய-இல் கேள்வி எண் 47 (அ) வில் கேட்கப்பட்ட 10 மதிப்பெண்ணுக்கான கேள்வி சமன்பாட்டை தீர்வு காணும் கிராப் வரைபடக் கேள்வி தவறாக இருந்ததை கண்டு மாணவர்கள் குழப்பமடைந்தனர். க்ஷ-க்கு பதிலாக 6 என்ற எண் கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது சரியான கேள்வியாகும். க்ஷ என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அது தவறான கேள்வியாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த கேள்வியில் க்ஷ என்ற இடத்தில் 6 என்ற எண் வரவேண்டும் எனவும், பாடப் புத்தகத்தில் அப்படித்தான் இருப்பதாகவும் பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இக் கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்றும் குழப்பமடைந்தனர். இதனால், மாணவ, மாணவிகள் குழப்பத்துடன் விடை முழுவதுமாக தெரிந்தும் கேள்விக்கு விடை எழுதாமல் தவிர்த்துவிட்டு வேறு கேள்விக்கு விடை எழுதியுள்ளனர்.

சிலர் கேள்வியை அப்படியே எழுதி தங்களுக்கு தெரிந்த சரியான விடையை எழுதிவிட்டு வந்துள்ளனர். தேர்வு எழுதிமுடித்துவிட்டு வந்த மாணவர்கள் இதுகுறித்து தங்கள் பள்ளி கணித ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தவறான கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு முழுமையாக மதிப்பெண் 10 கிடைக்குமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து சென்னை, ஏப். 4: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்துத் தெரிவித்தனர். ஆங்கிலம் இரண்டாம் தாளில் சில கடினமான வினாக்கள் இடம்பெற்றதால், மெல்ல கற்போரும், கிராமப்புற மாணவர்களும் பாதிப்படையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்,கணிதத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்துத் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog