TNTET-2013: வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்துஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம்வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog