Posts

Showing posts from December 26, 2015
'நெட்' தகுதி தேர்வு நாளை! கல்லூரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். கல்லூரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையே எழுதுவர். ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும். இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில், 50 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர்; மூன்று தாள்களுக்கு விடையளிக்க வேண்டும்.தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை, www.cbsenet.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இப்படித் தான் இருக்கும் வினாக்கள்: * 100 மதிப்பெண் - 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதில், 50 கேள்விகளுக்கு மட்டுமே