Posts

Showing posts from November 16, 2015
வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஆட்சியர் நந்தகோபால் தகவல்
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாயன்றும் விடுமுறை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்கிழமை (17.11.2015) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழையையொட்டி ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை தொடர்கிறது. இந்த நிலையில், மேற்கண்ட மாவட்டங்கள் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்கிழமை(நவ.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம் அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம்,3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர்இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்ப...