Posts

Showing posts from November 13, 2015
ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு அக்டோபர் மாதமும் கடைசி யாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு தகுதித் தேர்வு...