Posts

Showing posts from November 2, 2015
பிஎச்.டி., படிக்க தகுதித்தேர்வு மத்திய கல்வி நிறுவனங்களில், இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில், பிஎச்.டி., படிப்பில் சேர்வதற்கான, 'ஜெஸ்ட்' தேசியத் தகுதித் தேர்வை, மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னையிலுள்ள, இந்திய கணித அறிவியல் கல்வி நிறுவனம் உட்பட, நாட்டிலுள்ள, 20 உயர் கல்வி அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் இயற்பியல், கணிதம், நியூரோ சயின்ஸ் பிரிவுகளில், பிஎச்.டி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்' என்ற இந்த ஜெஸ்ட் தேர்வு, இந்த முறை, பஞ்சாப் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி 21ல், நாடு முழுவதும், பல தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. வரும், 5 முதல், டிசம்பர் 10ம் தேதி வரை, https://www.jest.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம் கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'சிடெட்' தேர்வு: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சிடெட்' நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, சிடெட் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியாயின.  6.55 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில், 1.14 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 17.48 சதவீதம். இதில், தமிழகத்தைச் சேர்ந்தோர் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதிலும் பலர், பிற மாநிலங்களில் வசிக்கும் தம