Posts

Showing posts from November 1, 2015
தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி தேர்தல் வருவதால், பாடங்களை விரைவில் முடிக்குமாறு, பள்ளி கல்வித் துறையும்; தேர்வு வருவதால், விரிவாக பாடங்களை நடத்துமாறு, தேர்வுத் துறையும் உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க, 4 மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு தேர்வும், தேர்ச்சியும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றம் மாணவர்கள் புரிந்து படித்து, சிந்தித்து எழுதுவதை சோதிக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, மாணவர்கள் வழக்கமான, கேள்வி - பதிலை மட்டும் மனப்பாடம் செய்யாமல், பாடங்களை விரிவாக, முழுமையாக படிக்கும் விதமாக, பாடம் நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதேபோல், 2016 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஜனவரியில் இருந்தே ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது; அதற்கான, பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் பணி இருப்பதால், பாடங்களை சீக்கிரம் முடித்து, 'ரிவிஷன்' து