4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அரசு தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலி யிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. நேர்காணலில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 10 மதிப்பெண், உயர் கல்வித்தகுதிக்கு 5 மதிப்பெண், பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண், கேள்வி-பதிலுக்கு 8 மதிப்பெண் என மொத்தம் 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்ட
Posts
Showing posts from October 21, 2015