Posts

Showing posts from October 8, 2015
ஆசிரியர்கள் வராமல் பள்ளிகள் இயங்கின: 75 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும். பள்ளிகளில் சைக்கிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே இதற்காக பள்ளிகள்தோறும் தனி அலுவலர் நியமிக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ அமைப்பினர் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வராத ஆசிரியர்கள்:நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் ...