TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.) கொண்டு வந்தது. 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010-ல் அமல் படுத்தப்பட்டு, 2011-ல் விதி முறைகள் வெளியிடப்பட்டன. மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2012-ல் ஜூலை மற்றும்அக்டோபரி லும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாக அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே, இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதார
Posts
Showing posts from July 29, 2015