Posts

Showing posts from June 17, 2015
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. இது கடும் கண்டனத்துக்குரியது.தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும் 4362 ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதன்பின் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையி...
ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் 454 பேர் கொண்ட முதல்நிலைத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகளில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நேரடித் தேர்வு முறையில் பணியில் அமர்த்த 2014 ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது. இப்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அனுமதியின் அடிப்படையில் இந்த முதல்நிலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தகுதி, உண்மை சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு ‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர்பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடமாறுதலை எதிர்த்து வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யும்படி ஆசிரியர்கள் 2 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வி.முருகானந்தம் ஆஜராகி வாதாடினார். பரந்த மனப்பான்மை தேவை மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:- நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன்கருதி மனுதாரர்கள...