ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்கள். ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கப்பட்டு வருகிறது. பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 81 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது, இருவர் மட்டுமே உள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. தலைமையாசிரியர் இல்லை மேலும், கடந்த மார்ச் மாதம்முதல், தலைமையாசிரியர் பதவி உயர்வில், வேறு இடத்திற்கு சென்ற பிறகு, புதிதாக தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, செல்லும் மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் வழங்குவதில் சிரமம் தொடர்கிறது. கடந்த ஆண்டு, பள்ளி அருகில் உள்ள ரயில் நிலைய சாலையோரம்வசித்து வந்தவர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பழவேற்காடு சாலையில் உள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களது பிள்ளைகள் மேற்கண்ட பள்
Posts
Showing posts from June 12, 2015