Posts

Showing posts from June 10, 2015
போட்டித் தேர்வு மூலம் கல்லூரி பேராசிரியர் நியமனம் நடைபெற வேண்டும்: ஜி.கே.வாசன் போட்டித் தேர்வின் மூலம் கலை- அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் நடைபெற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனம் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆனால் பல்கலைக்கழகங்கள், கலை- அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நேர்காணல் மூலம் மட்டுமே பேராசிரியர்கள் பணி நியமனம் நடைபெறுகிறது. அவ்வாறு நேர்காணல் நடைபெறும் போது தன்னிச்சையாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் பேராசிரியர் நியமனம் நடைபெறும்போது கல்வித் தகுதியை கருத்தில் கொண்டு பணியமர்த்தப்பட வேண்டும்.கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும்போது திறமையான பேராசிரிய...
‘ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை’ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உள்ளீட்டு எல்லைக்கு உட்பட்டதல்ல. அப்பதவிகான தேர்வினையோ அல்லது விண்ணப்பப் பரிசீலனையோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவில்லை.மேற்படி பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் வெளிப்படைத் தன்மையுடனே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அனைத்தும் விரைவாக வெளியிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம் கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு தொடர்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர். அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டிய பதில்களை தயாரிக்கின்றனர்.சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால்பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது. சில நேரங்களில்பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதோடு, ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும் உதவியாளர்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் மற்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அல...