Posts

Showing posts from June 6, 2015
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில்தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்...