கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ் கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால் தேர்வானவர்கள் பட்டியலில் தமது பெயர் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 652 பணியிடங்களில் 130 பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படும் என அறிவித்துவிட்டு, 154 பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ...
Posts
Showing posts from April 27, 2015
- Get link
- X
- Other Apps
உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும் உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்த வேண்டும் என நெட், ஸ்லெட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் ஆலோசகர் சுவாமிநாதன், இணைச் செயலர் தங்க முனியாண்டி ஆகியோர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு எதிராகவும், வெளிப்படையாக இல்லாமலும் உள்ளது. அதேநேரம் அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணியிடங்களை நிரப்பியபோது, யுஜிசி விதிமுறைகள் முழுமையாக பின்பற்றியதோடு, தேர்வில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது. மேலும் டி.ஆர்.பி. அமைப்பானது பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும்.எனவே, வரும் காலங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கானத் தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. மூலமே நடத்த வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர்கள் உரிமை பறிக்கப்படுகின்...
- Get link
- X
- Other Apps
ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. * 10ம் வகுப்பு முடித்து, 2014, ஜூலை 1ம் தேதி, 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலினத்தவர் அதிகபட்ச வயது 35, மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் ஆகியோருக்கு 32, மற்ற வகுப்பினர் 30. ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட, அதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால், உச்ச வயது வரம...
- Get link
- X
- Other Apps
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார் அரசு உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால்,தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது. கல்வித்தகுதி:தேசிய கல்விக் கொள்கைப்படி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) பரிந்துரைப்படி, கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 'நெட்' தேர்வு நிர்ணயிக்கப் பட்டது. அதேநேரம், 2009ல் புதிய விதிமுறையைப் பின்பற்றி, பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பு முடித்தோர், நெட் தேர்வு எழுத விதிவிலக்கு தரப்பட்டது. இந்நிலையில், 2012ல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கு, 1,183 பேர் நியமிக்க, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்குப் பின், தற்காலிக தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடு கள் நடந்துள்ளதாகவும், டி.ஆர்.பி., நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் பு...