Posts

Showing posts from April 26, 2015
ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடைகட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில்,பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தல், மாணவியரிடம் ஆசிரியர் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ளுதல் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் கல்வித் துறையில், ஒழுக்கக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. எனவே, சில கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி, * ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி ...