Posts

Showing posts from April 25, 2015
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்கள் ) (*கட்டாயம் தேவைப்படுவன) 1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ் 2) *சாதி சான்றிதழ் 3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card) 4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ் 5) உயர்கல்விக்கான சான்றிதழ் 6) பணி முன் அனுபவம் இருந்தால் அதற்கானச் சான்றிதழ் வயது வரம்பு : SC/ST & Destitute widows of all community. - 35 வயதுக்குள் BC, MBC/DC & BC Muslim community. - 32வயதுக்குள் Others - 30 வயதுக்குள் குறைந்தப்பட்ச கல்வித்தகுதி SSLC +2 , Degree அல்லது அதற்கு மேலும் கல்வித்தகுதியைப் பெற்றுள்ள BC, MBC, SC, ST & BC (Muslim) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.(57 வயது வரை) கட்டணம் : Rs.100 + Rs.50 service charge SC, SC(A), ST , Destitute Widows & Physically Challenged persons க்கு தேர்வுக்கட்டணம்Rs. 100 செலுத்த தேவையில்லை. (முக்கிய குறிப்பு-தேர்வுக்கு ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம் ...
பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4,362 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. குறைந்த பட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ள நோடல் மையத்தில்இருந்து ஆன்லைனில் பலர் விண்ணப்பித்தனர். விண்ணப்பிக்க மே 6-ந்தேதி கடைசி நாள். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31-ந்தேதி நடைபெற உள்ளது.
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடக்கம் தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வகஉதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சிறப்பு சேவை மையங்களுக்கு தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப் பித்தனர். சென்னையில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்று ஆய்வு செய்தார். முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக் கையிலான தேர்வர்களே விண் ணப்பிக்க வந்திருந்தனர். ஆய் வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6-ம் தேதி. எழுத்துத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது
தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு 'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி.ஏ.,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ் வழியிலும்; எம்.ஏ.,(பொருளாதாரம்) ஆங்கிலத்திலும் படித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன் ராஜா விண்ணப்பித்தார். டி.ஆர்.பி., தலைவர் அதை நிராகரித்தார். ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன் ராஜா மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் உத்தரவு: அரசாணைப்படி தமிழ்வழியில் படித்தவர்கள் யார் ...