வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு! போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் வெயிட்டேஜ் மதிபெண் தொடர்பாகவும், இன வாரியான ஒதுக்கீடு வழங்காதது குறித்தும் தான் இருக்கிறது. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் அதிக கவனம் எடுப்பதாக தெரியவில்லை. அதிமுக ஆட்சி இன்னும் 1 ஆண்டுதான் உள்ள நிலையில் இப்படியே வழக்குகளை இழுத்தடித்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக கட்சிமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. ஆனாலும் அரசு கொள்கை முடிவு, அரசு உத்தரவுகளை காட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வழ...
Posts
Showing posts from April 20, 2015
- Get link
- X
- Other Apps
2 ஆண்டு பி.எட். படிப்புக்கான கல்வித் திட்டம் தயார்- துணைவேந்தர். இரண்டு ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டங்கள் தயார்நிலையில் உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகளாகஉயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி கல்வித் திட்டத்தையும் என்.சி.டி.இ.வெளியிட்டது. அதன்படி, இரண்டாண்டு பி.எட். படிப்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன் - ஒருங்கிணைந்த கல்வி ஆகிய 4 தலைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும் யோகா கற்பது கட்டாயமாக்ப்பட்டுள்ளது. மேலும், பி.எட். கல்வித் திட்டம் மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தியரி (பாடம்), செய்முறை பயிற்சி, தொ...
- Get link
- X
- Other Apps
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார் ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளநிலையில் இவ்வழக்கு, நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்.... மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.... டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Article by P.Rajalingam Puliangudi...
- Get link
- X
- Other Apps
அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு 'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை உருவாக்கி உள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மார்ச் 8ம் தேதி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடந்தது. இரண்டாம் கட்டமாக நேற்று, 32 மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்கள் நடந்தன. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். சென்னை, சேப்பாக்கத்தில், ஆசிரியர்கள் லிங்கேசன், சத்தியநாதன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க மாநில தலைவர், சங்கரபெருமாள் பேசுகையில், ''ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து, ஜாக்டோ குழுவுடன், அரசு பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் ...