Posts

Showing posts from April 19, 2015
7243 செவிலியர் பணிக்கு தேர்வு அறிவிப்பு : TNMRB நடத்துகிறது . தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 7243 ஆண், பெண் செவிலியர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வைதமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 7243 பணியிடங்களில் 6792 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் செவிலியர்கள் முதலில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு தொகுப்பூதியம் வழங்கப்படும். இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.05.2015. எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 28.06.2015. மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov. in
மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில், 190; மேல்நிலைப் பள்ளிகளில், 460 தலைமை ஆசிரியர்கள் மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். இதற்கான பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தயாரித்துள்ளது. இதேபோல், தலைமை ஆசிரியர் பதவியை பெறுவோருக்கான பணி மூப்பு பட்டியலையும் உருவாக்கியுள்ளது. இப்பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகள் வாரியாக, தோராய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கவுள்ளது. இதேபோல், பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் காலியிட பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. முயற்சி: காலியாகும் தலைமை ஆசிரியர்களின் பதவிகளை பிடிக்கவும், தேவையான மாவட்டங்களில் அவற்றை மாற்றவும், ஆசிரியர்கள் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதேபோல், பதவி உயர்வால் காலியாகும் பட்டதாரி...
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 378 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் ராயபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய 2 இடங்களில் தேர்வு நடந்தது. ராயபுரம் பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4...