Posts

Showing posts from April 18, 2015
அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ் அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அம்மா உணவகங்கள், கோவில் தோறும் யாகங்கள் போன்ற நடவடிக்கைகள் போட்டிபோட்டுச் செய்யப்படும் போதிலும் கல்விக்கு முக்கியத்துவம் தராத அவலநிலை நிலவுகிறது.தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருப்பது வழக்கம். மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பிரிவு அல்லது இரு பிரிவுகள் இருக்கும். இதனால் ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் பிரிவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 5 அல்லது 10 வகுப்பறைகள் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 47.18% அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 2 வகுப்பறைகள் மட்டும் தான் இருப்பதாக கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக...
பொறியியல் கல்லூரிகள் உதவிப் பேராசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டித் தேர்வில் 57 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய அறிவிப்பாணை மே மாதம் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, போட்டித் தேர்வு 2014, அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற்றது. மொத்தம் 23,764 பேர் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயித்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த வயது வரம்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 57-ஆக உயர்த்தியது.விண்ணப்ப விநியோகம் முடிவடைந்த பிறகே இதற்கான அரசாணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்தப் பணி நியமனம் ...
ஆசிரியர்களை அடிமை என்று நினைத்தார்களா? ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் கடும் கண்டனம். ஊரில் காய்ச்சலா? கூப்பிடு ஆசிரியர்களை... குப்பைகளை பொறுக்கச் சொல்லு.... டெங்குவா? மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை... வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தலா கூப்பிடு ஆசிரியர்களை.... மக்கள்தொகை கணக்கெடுப்பா கூப்பிடு அவர்களை தலையில கட்டு.... தேர்தல் பணிகளா போகலன்னா மெமோ கொடு நலதிட்டங்களா தலைமை ஆசிரியர் தலையில் கட்டு... இந்த வரிசையில் இப்போ சமையலா அதையும் ஆசிரியரே செய்யட்டும் என அரசு வற்புறுத்துவது ஆசிரியர் இனத்தையே அசிங்கப்படுத்தும் செயலாகும்.... சத்த்ணவு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதை விட்டு சமையல் செய்யும் வேலையை ஆசிரியர்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்? இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல், மனரீதியாக பாதிக்கசெய்து விட்டு சமையல் வேலையையும் செய்யச்சொல்லுவதா? இதை எந்த கல்வியாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.... ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இதர பணிகளை செய்ய கட்டளையிட்டா...