Posts

Showing posts from April 9, 2015
வேளாண் துறை போல் டி.ஆர்.பி.,யிலும் குளறுபடி : பள்ளிக்கல்வி துறை மவுனம்: பட்டதாரிகள் அச்சம் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில், சந்தேகங்கள் எழுந்துள்ளன.சமீப காலமாக, டி.ஆர்.பி.,யின் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பில் குழப்பம், இறுதிப் பட்டியலில் குளறுபடி, நேர்முகத் தேர்வில் பாரபட்சம் என, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சந்தேகம் ஆனால், தமிழக கல்வித்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளதால், வேளாண் துறை போல் முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்து உள்ளன. *ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, டி.ஆர்.பி.,க்கு எதிராக, மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். *இதேபோல், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இதற்கு, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். *மற்றொரு பிரச்னையாக, போலி ஜாதி சான்றிதழ் கொண்டு வந்தவரை, டி.ஆர்.பி., தேர்வு செய்ததும், வெட்ட வெள...
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வானோர் பட்டியல் வெளியீடு உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது. 2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன. பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத...