Posts

Showing posts from April 8, 2015
TET: GO 71 மற்றும் 5% வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 13 அன்று விசாரனைக்கு வருகிறது. GO 71 மற்றும் 5% தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் இறுதி தீர்ப்பை பொறுத்தே வரும் ஆகஸ்ட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளது 10000 பணியிடங்கள் வரை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கோரிய நிலையில் அதற்கான கால கொடு முடிந்து வரும் ஏப்ரல் 13 அன்று இந்த வழக்குகள் விசாரனைக்கு வருகிறது.
தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம் எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.  அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக வி...
கணிதத்தில் 6 மதிப்பெண்: தேர்வுத்துறை கொடுக்குமா? 'பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், குழப்பமாக இடம்பெற்ற வினாக்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, மதுரை மாவட்டச் செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற, 15வது வினா, தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் பெறும் வகையிலும் கேட்கப்பட்டது. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வினா, 'புளூபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. பாடப் பகுதியில் இல்லாத, 'சாய்சதுரம்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அதே வினா, ஆங்கிலத்தில் குழப்பமாக கேட்கப்பட்டது. எனவே, இந்த இரண்டு வினாக்களுக்கும், விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும். சங்கம் சார்பில் இந்த கோரிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.