தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலியிடங்களால் அரசுப்பணிகள் முடக்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணிகள் ஏதும் நடக்காமல் முடங்கியநிலையில் உள்ளது. இதை கண்டித்தும், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து விரைவில் போராட்டம் நடத்த போவதாக அரசுப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் தமிழரசன் கூறினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. பின்னர் மாநிலத்தலைவர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்காலிக பணியாளர்களாக சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வளர்கல்வி ஊழியர்கள், கணினி பயிற்றுநர்களை இதுவரை தமிழக அரசு நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. குறிப்பாக 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தைஅமல்படுத்தி ஏமாற்றி வருகிறது. அதிமுக தேர்தல் வாக்குறுதியின்படி இதனை மாற்றிஅமைக்க ந...
Posts
Showing posts from April 6, 2015