உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி:உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் ...
Posts
Showing posts from April 5, 2015
- Get link
- X
- Other Apps
அரசு பணி வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் : கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்க மாநில செயலாளர் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் படுத்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6 , 8 மற்றும் 10 வகுப்புகளுக்கு கணிப்பொறி இயல் என்ற பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக மூன்று ஆண்டுகளாக கணிப்பொறி இயல் பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அரசு நிறுத்தி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினியில் பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்கி, கணினியில் பி.எட் முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடத்...
- Get link
- X
- Other Apps
கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம் : முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில்503 கணினி பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான இணையதள கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற கலந்தாய்வில் கணினி பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இதில் ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்...
- Get link
- X
- Other Apps
போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு சிறப்பாசிரியர் கோரிக்கை 'பணால்' 'குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கானபோட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர். பணி நிரந்தரம்: தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர் களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது. பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள் அரசுக்கு மனு அனுப்பினர். மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய...