Posts

Showing posts from April 4, 2015
பீகார் : ஆசிரியர் தகுதி தேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வி பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது. இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறை தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3 ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தார். மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
கணினி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம்: இன்று கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்? கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும் கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள, 652 கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு பெறவில்லை. அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தனர். இதனால், புதிய ஆசிரியர் நியமனப் பணி, பல மாதமாக இழுத்தடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, 652 ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., கடந்த, 20ம் தேதி வெளியிட்டது. ஏப்., 4ம் தேதி (இன்று), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் புதிய சிக்கல் எழுந்து உள்ளது. கணினி ஆசிரியர் நியமனத்தில் விதவைகள் மற்றும் கலப்பு மண...