Posts

Showing posts from April 1, 2015
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., ஹால்டிக்கட் மற்றும் உரிய சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சமூக நலத்துறை கடந்த 1981–ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசாணைக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ‘’இந்த வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘1 முதல் 5–ம்...
அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிமாறுதல் கவுன்சிலிங் எதிர்பார்ப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு,'கவுன்சிலிங்' நடத்தி பணி இட மாறுதல் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைக் கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்டுவரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்ததால், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பாடத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றபின், கடந்த 2008ல், காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். தேர்ச்சி பெறாதோரின் நியமனம் செல்லாது என, நீதிமன்றம் அறிவுறுத்தியதால், 652 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், முன்னுரிமை பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில், பணி நியமன கவுன்சிலிங் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்க...
குளறுபடி பாடத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்வித்துறைக்கு 'நோட்டீஸ்': கலை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை 'ஓவியம் தொடர்பான குளறுபடியான பாடத்திட்டத்தை ரத்துசெய்யாவிட்டால், வழக்கு தொடரப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கலை ஆசிரியர் சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் கலை ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இந்த இடங்களில், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வை நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்த உள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. இதற்கு கலை ஆசிரியர்கள், ஓவியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடத் திட்டத்துக்குரிய புத்தகங்கள், ஆன் - லைன் உட்பட எங்கும் கிடைக்கவில்லை. இப்பாடத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கலை ஆசிரியர் சங்கம் சார்பில், கல்வித் துறைக்கு சட்ட ரீதியாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர்...