பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில்முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன. இதனிடையே, மீண்டும் 2012-13-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிலையில், பணியிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும...
Posts
Showing posts from March 31, 2015
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா? இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில், 1.ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள்அல்லது3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Probability of getting 3 headsand3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது. 2.5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண் 38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம்என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7)are the vertices of a rhombus." என்று உள்ளது.மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.