Posts

Showing posts from March 29, 2015
முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு? முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டு, 1,789 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, இணையதள கவுன்சிலிங், நேற்று, தமிழகம் முழுவதும் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் இருந்து, இணையதள இணைப்பின் மூலம், பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, கவுன்சிலிங் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை இணைக்கும், இணையதள, 'சர்வரில்' கோளாறு ஏற்பட்டதால், குறித்த நேரத்தில், கவுன்சிலிங் துவங்கவில்லை. இதனால், பல மாவட்டங்களில் இருந்து, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வந்திருந்த முதுகலை பட்ட...